மிஷ்கின் என்ற வார்த்தையை கூறினால் அவரது பெயரை போன்றே அவர் இயக்கும் படங்கள் அனைத்தும் ஒரு மர்மமான கதைகளத்தை கொண்டிருக்கும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனரும் நடிகரும் இசையமைப்பாளருமான மிஷ்கின் தனக்குள் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பாடகர் என்ற பெரும் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் முதலில் 2006 ஆம் ஆண்டில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் மற்றும் சைக்கோ என்று குறைந்த அளவிலான படங்களை இயக்கியுள்ளார். இருப்பினும் இவர் இயக்கிய இந்த ஒன்பது திரைப்படங்களுமே மாறுபட்ட கலை சூழலையும் ஒரு மர்மம் மற்றும் திரில்லர் கலந்த கதைக்களமாகவும் இருந்துள்ளது.அதிலும் குறிப்பாக அஞ்சாதே பிசாசு துப்பறிவாளன் மற்றும் சைக்கோ ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்புகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சினிமா வட்டாரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ள மிஷ்கின் பல நேரங்களில் அவரின் சில கருத்துக்களால் விமர்சனங்களையும் பெற்று வருவார் என்பது மறுக்க முடியாத ஒன்று! இப்படித்தான் நடிகர் விஷால் குறித்து பேசிய கருத்து பெருமளவில் விமர்சனங்களை பெற்றது அதாவது பொதுவெளியில் விஷாலை அவன் ஒரு பொறுக்கி என்று கூறியது இன்றளவும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது அதுமட்டுமின்றி இதற்கு பதில் அளிக்கும் வகையில் விஷாலும் மிஸ்கின் செய்த துரோகத்தை நான் மறக்கவே மாட்டேன் என்று ஒரு நேர்காணலில் கூறியதும் தமிழ் சினிமாவில் ஒரு புயலை கிளப்பியது. இது மட்டும் இன்றி பல சினிமா படங்கள் வெளியீடு இசை வெளியீட்டு விழா என்ற மேடைகளில் கலந்து கொள்ளும் மிஷ்கின் எதார்த்தமாக தன் இயல்பில் பல வார்த்தைகளை கூறிவிடுகிறார் பலரைப் பற்றியும் பேசி விடுகிறார் அது அவருக்கே பின்பு சர்ச்சையாக மாறிவிடுகிறது. இந்த நிலையில், சவரக்கத்தி படத்தின் இயக்குனரும் மிஷ்கினின் சகோதரருமான ஆதித்யா இயக்கத்தில் மிஸ்கின், விதார்த், பூர்ணா மற்றும் அருண் என பலர் நடிப்பில் உருவாக்கி இருக்கும் டெவில் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது அதில் கலந்து கொண்ட மிஷ்கின், ஒருவர் நடிக்கும் பொழுது தன் சுயத்தை ஒருவர் இழக்கிறார் என்றால் அவர்தான் சிறந்த நடிகை நடிகர் என்று கூறுவேன் நடிகை பூரண அந்த மாதிரியான ஒருவர்! சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதை பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவள் பூரணா! பூரணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு பெண், என்னையும் அவளையும் குறித்து சிலர் தவறாக பேசுவார்கள்.
ஆனால் அவள் எனக்கு தாய் போன்றவள் அவளது வயிற்றில் நான் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன், அவள் ஏன் இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொண்டாள் என்று தெரியவில்லை அதுவும் துபாய்யில் இருக்கிறாள் இங்கு இருந்தால் கூட அடிக்கடி அவளை பார்க்கலாம் சினிமா துறையில் நீ சாதிக்க வேண்டியது அதிகம் இருக்கிறது விரைவில் திருமணம் செய்து கொள்ளாதே என்று கூறுவது நான்! மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்பதை எனக்கு தெரியாது ஆனால் என் படங்களில் நிச்சயம் பூர்ணா இருப்பாள் என்று மிஷ்கின் மேடையில் நடிகை பூர்ணா குறித்து பேசினார். ஆனால் அப்பொழுது மேடையில் இருந்த மற்ற அனைவரும் அமைதியாக இருந்தனர் ஏனென்றால் பூர்ணா குறித்து எனக்கும், அவருக்கும் தொடர்பு என குறிப்பிட்டு பேசியிருந்தது சிலரது முகம் சுழிப்பை பெற்றது மேடையில் ஒரு பெண்ணை குறித்து இப்படி எல்லாம் பேசலாமா என்று விமர்சனங்களும் தற்போது மிஷ்கின் பேச்சுக்கு எழுந்துள்ளது.