பள்ளி மற்றும் கல்லூரி பருவங்கள் என்றுமே மறக்க முடியாத நினைவுகள் பள்ளியில் பயிலும் காலத்தில் எப்பொழுது பள்ளியை விட்டு கல்லூரிக்கு செல்வோம் ரொம்ப படிக்க சொல்றாங்க நிறைய ஹோம் ஒர்க் இருக்கு புக்ஸ் நோட்ஸ் அதிகமா எடுத்துட்டு போகத் தேவையில்லை என்று ஒரு திரைப்பட பிம்பத்தை நம்பிக்கொண்டு சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் பள்ளி பருவம் முடிந்த பிறகு கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் தெரியும் இதற்கு ஸ்கூலுக்கு போயிடலாம் போலயே காலேஜ்ல பாடம் எடுக்குறாங்க திடீர்னு பார்த்தா எக்ஸாம்னு சொல்றாங்க நம்ம எங்க படிச்சோம் என்று ஒவ்வொரு கல்லூரி மாணவ மாணவிகளும் புலம்பும் வகையில் கல்லூரி வந்த பிறகு பள்ளி பருவத்தை அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பார்கள். கல்லூரி காலமும் அப்படியே சென்று கொண்டிருக்கும் கல்லூரி காலமும் முடிந்து விடும் முடிந்த பிறகு சிலருக்கு திருமணம் ஆகிவிடும் சிலர் வேலையை நோக்கி செல்வார்கள் சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலே முடங்கி இருப்பார்கள் அந்த சமயத்திலும் கல்லூரி பருவத்தை அதிக அளவில் நினைத்துப் பார்ப்பார்கள் தனது நண்பர்கள் அனைவரையும் அடுத்து என்று! பார்க்கலாம் என்ற ஒரு கண்ணீர் நிரம்பிய நாளாகவே கல்லூரியின் இறுதி நாள் மற்றும் பள்ளியின் இறுதி நாள் இருக்கும்.
கல்லூரி பருவங்கள் முடிந்த பிறகு சில ஆண்டுகள் கழிந்து திடீரென்று எதார்த்தமாக தனது நண்பர்களையும் அல்லது தன்னுடன் பயின்ற மாணவ மாணவியையும் பார்க்கும் பொழுது நம் உள்ளம் ஒரு விதமான மகிழ்ச்சியை அடையும். அதைவிட இன்னும் மகிழ்ச்சியில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் நாள் அன்றும் ஏற்படும். அப்படி ஒரு நாளிற்காக பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். இப்படி பள்ளிப் பருவம் மற்றும் கல்லூரி பருவம் எவ்வளவு பெரிய தாக்கத்தை நம்மில் ஏற்படுத்தி சென்று விட்டது என்பதையும் பல ஆண்டுகள் பிறகு நமது நண்பர்களையும் நம்முடன் படித்தவர்களின் பார்க்கும் பொழுது எவ்வளவு மகிழ்ச்சி நாம் அடைவோம் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானாம் 96 திரைப்படம் தெளிவாக காட்டியது. இந்த படம் வெளியாவதற்கு முன்பு சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் பழைய மாணவர்களை அழைத்து ரீ யூனியன் என்ற பெயரில் விழா நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படம் வெளியானதற்கு பிறகு இந்த ரீ யூனியன் என்பது அதிக அளவில் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.
பல மாவட்டங்களில் பல கல்லூரிகள் 90களில் 80 மற்றும் 70களில் படித்த மாணவ மாணவிகளை மறுபடியும் அழைத்து விழா நடத்தி வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது கோவை மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி தனது 25வது ஆண்டை கொண்டாடும் வகையில் 95 - 99 ஆண்டில் படித்த மாணவ மாணவிகளுக்கு ரீ யூனியனை அறிவித்துள்ளது. மேலும் இந்த விழா ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் என்றும் கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் ஆரம்பமே பிரபல நடிகையான சன்னி லியோன் ஒரு பாடலிற்கு ஆடுவது காண்பிக்கப்பட்டு கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் சில்வர் ஜூப்ளி விழாவை கொண்டாடுவதற்கு சீப் கெஸ்ட் ஆக சன்னி லியோன் அவர்கள் வரப்போவதில்லை ஆனால் நீங்கள் வாருங்கள் என்ற வகையில் இந்த வீடியோவை ஆரம்பத்தில் சன்னிலியோனை காண்பித்து விட்டு இறுதி நாள் சன்னிலியோன் வரவில்லை என்ற ஒரு தகவலையும் அறிவித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.