Cinema

தமிழ் சினிமாவில் இந்த 5 சாதிகளின் பாகுபாடு இருக்கிறது வித்தியாசமான முறையில் பட்டியல் போட்ட எழுத்தாளர்.!

Ranjith P director
Ranjith P director

திரைப்பட நடிகர் காமல்ஹாசன் கருத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் கருத்து தெரிவித்து இருக்கிறார் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இசைவெளியிட்டு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது சினிமாவிற்கு சாதி, மதம் எதுவும் கிடையாது என்று பேசியிருந்தார். யார் என்ன கூறினாலும் பரவாயில்லை, சினிமாவிற்கு சாதி மதம் கிடையாது. இங்கு விளக்கை அணைத்தால் ஒரே ஒளி மட்டும்தான் என்றும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருந்தார்.


இந்த சூழலில் நடகர் கமலின் சாதியில்லை என்ற கருத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் மறுப்பு தெரிவித்து  கருத்து தெரிவித்து இருந்தார்  தமிழ் சினிமாத்துறையில் சாதி வேற்றுமை இருக்கிறது என்ற எனது நிலைப்பாட்டில் நான் தெளிவாக உறுதியாக இருக்கிறேன். அவற்றை நான் முழுமையாக உணரவும் செய்கிறேன் என பா.ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார் கமலின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து பா. ரஞ்சித் பேசியுள்ளது திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில்., எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் இயக்குனர் ரஞ்சித் கருத்தை விமர்சனம் செய்துள்ளார்.

அதில் சினிமாவில் சாதி இல்லை என சொன்ன கமலஹாசனுக்கு அங்கு சாதி உண்டு என பதிலளித்தார் பா.ரஞ்சித்தர் ஆம் இருக்கலாம், எமக்கு தெரிந்து அங்கு சாதி உண்டு,  அது தேசபற்றே இல்லா சாதி, கள்ள நாத்திக சாதி, நன்றிகெட்ட சாதி, சந்தர்ப்பவாத சாதி , கதை முதல் இசைவரை  திருடும் சாதி என பல சாதிகள் உண்டு கருத்து தெரிவித்து இருக்கிறார்.

ரஞ்சித் சொன்னது என்னமோ வேறு அர்த்தத்தில் ஆனால் எழுத்தாளர் தெரிவித்தாதோ வேறு ஒன்று மொத்தத்தில் சாதி பாகுபாடு இல்லை என சொல்லும் கமலுக்கும் சாதி பாகுபாடு இருக்கிறது என சொல்லும் பா. ரஞ்சித்திற்கு இருக்கும் கருத்து சுதந்திரம் என்னென்ன சாதி பாகுபாடு இருக்கிறது என நான் நினைக்கிறேன் என சொல்ல எழுத்தாளருக்கும் இருக்கிறது என்ற அடிப்படையில் அவர் தனது கருத்தை சற்று வித்தியாசமான முறையில் பதிவு செய்துள்ளார்.