திரைப்படத்தில் இந்து மதம் குறித்தோ அல்லது மத்திய அரசின் திட்டங்கள் குறித்தோ மறைமுக விமர்சனம் வைத்தால் அதனை பாஜகவினரோ அல்லது இந்து அமைப்புகளோ எதிர்க்கும் அதன் மூலம் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்ற ரீதியில் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் வர தொடங்கி இருக்கின்றன. இந்த வகையில் அதே எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம்தான் ஆண்டி இந்தியன் என்ற திரைப்படம் பாஜக மூத்த தலைவர் H ராஜா ஆண்டி இந்தியன் என பேசும் பிரபல வசனத்தை படத்தின் தலைப்பாக வைத்து படத்தை எடுத்து இருந்தனர்.
திரைப்படங்களைக் கண்டபடி விமர்சனம் செய்பவர் என்று பெயரெடுத்தவர் ப்ளூசட்டை மாறன் என்கிற இளமாறன். விளம்பரங்களை வரையும் ஓவியரான பாட்ஷா யாராலோ கொலை செய்யப்பட்டு இறந்து போகிறார். அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு நடக்கிறது. பாட்ஷாவின் தாய் மாமன், அவர் சார்ந்த இந்து கட்சியின் தலைவர், பாட்ஷாவின் சித்தப்பா, அவர் சார்ந்த முஸ்லிம் மதத் தலைவர்கள், பாட்ஷவின் அம்மா, அவர் சார்ந்த கிறிஸ்துவ மதத் தலைவர்கள் என மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் அந்த உடலை வைத்து தங்கள் மதத்திற்காக அரசியல் செய்கிறார்கள்.
இவர்கள் தவிர இந்த பிணத்தை வைத்து அரசியல் செய்யும் ஆளும் கட்சி முதல்வர் ராதாரவி, அவருக்கு ஆலோசனை சொல்லும் உதவி கமிஷனர் ஆடுகளம் நரேன், இன்ஸ்பெக்டர் வழக்கு எண் முத்துராமன் என மற்றொரு பக்கம் இடைத் தேர்தல் அரசியல் நடக்கிறது. இந்த திரைப்படம் வெளிவந்து மிக பெரும் தோல்வியை தழுவி இருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மக்களிடம் இந்த திரைப்படம் குறித்த எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் படம் வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது, எப்படியாவது பாஜக தலைவர்களோ அல்லது மத அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கும் அதன் மூலம் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் எப்படியும் போட்ட பணம் கிடைத்துவிடும் என கணக்கு போட்டு காத்து இருந்ததாம் தயாரிப்பு குழு.
ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை மாநாடு திரைப்படத்தின் போதே பாஜக தலைவர்கள் பொழுதுபோக்கு திரைப்படங்கள் குறித்து கருத்து சொல்லவேண்டாம் அது தவறாக உருவகப்படுத்தபடுகிறது என அறிக்கை கொடுத்தார், இந்த சூழலில் பாஜக தலைவர்கள் எப்படியாவது ஆண்டி இந்தியன் படத்திற்கு இலவச விளம்பரம் செய்வார்கள் என காத்து இருந்த திரைப்பட குழுவினருக்கு அண்ணாமலை சொன்ன தகவல் போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று நினைத்த தயாரிப்பு தரப்பிற்கு கனவில் மண்ணள்ளி போட்டுவிட்டது. மொத்தத்தில் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்பதால் ஊதா சட்டை மாறன் தரப்பு படக்குழு ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்து உள்ளதாம்.
#AntiIndian Box Office
— Manobala Vijayabalan (@ManobalaV) December 15, 2021
TOTAL WASH OUT