Cinema

உதயநிதி திரைப்பட வசனத்தை வைத்தே திமுக வரலாற்றை புரட்டி போட்டு விட்டார்களே !

udhayanithi film
udhayanithi film

உதயநிதி நடிப்பில் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் வரும் தீட்டுனா என்ன என்ற திரைப்பட வசனத்தை வைத்தே ஒட்டுமொத்த திமுக கடந்த கால வரலாற்றை புரட்டி போட்டு வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர் நெட்டிசன்ஸ் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


உதயநிதி ஸ்டாலின் நடத்த 'நெஞ்சுக்கு நீதி' படம் கடந்த 20-ம் தேதி வெளியானது. வெளியானது முதல் தமிழக அமைச்சர் உட்பட பல திமுக நிர்வாகிகள் படத்தைப் பார்த்து கருத்து தெரிவித்து வருகிறன்றனர். இந்நிலையில் பல இடங்களில் இலவச பிரியாணி கொடுத்து திரைப்படத்திற்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டு இருக்கின்றனர்.

முக்கியமான திரை அரங்குகளில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை ஓட வைக்க பல்வேறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் போட்டி போட்டு வருகின்றனர் நிலைமை இப்படி இருக்க திரைப்படத்தில் வரும் தீட்டு என்றால் என்ன என உதயநிதி கேட்க, அதற்கு தயாநிதி மாறன் தொடங்கி, வன்னியரசு வரை பலரும் பேசிய காட்சிகளை ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

அடடே நெஞ்சுக்கு நீதி திரைப்படமும் தமிழ் படம் கிடையாது இந்தியில் இருந்து ரிமேக் செய்யபட்டது, படத்தில் வரும் வசனமும் இப்போது திமுகவிற்கு எதிராக முடிகிறதே என கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.