
திரை பின்புலம் இல்லாமல் திரையுலகம் வந்தால் இந்த அவமானத்தை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் வித்யா பாலனின் உருக்கமான கருத்துஇந்திய சினிமாவில் பெண்களை மயமாகக் கொண்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை காட்டி பெண்களின் சித்தரிப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வரும் முக்கிய நடிகைகளின் நடிகை வித்யா பாலனும் முக்கியமான நடிகையாவார். இவருக்கு தேசிய திரைப்பட விருது மற்றும் ஏழு பிலிம் பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்துள்ளது மேலும் 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார். இவர் பிறந்தது தமிழ் பிராமண குடும்பம், கேரளாவில் பாலக்காட்டில் பிறந்ததாகவும் மலையாள மற்றும் தமிழ் கலந்து பேசும் பழக்கம் கொண்டவராகவும் வித்யா பாலன் இருந்துள்ளார். சிறுவயதிலிருந்தே திரைப்படத் தொழிலில் ஈடுபட விரும்பிய வித்யா பாலன் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகே நடிப்பை தொடர விரும்பினார் மேலும் சமூகவியலில் இளங்கலை பட்டப்படிப்பை செயிண்ட் சேவியர் கல்லூரியில் பயின்று மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றவர்.
அப்பொழுதே மோகன்லாலுக்கு ஜோடியாக மலையாள திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற வித்யா பாலன் சக்கரம் என்னும் படத்தில் கதாநாயக நடித்தார். அதோடு பன்னிரண்டு மலையாள மொழி படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஆனால் மோகன்லாலுடன் நடிக்க இருந்த சக்கரம் என்னும் திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டதால் இவர் துரதிஷ்டசாலி என்ற குற்றச்சாட்டிற்கும் ஆளானார்.அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் கவனம் செலுத்திய வித்யா பாலனுக்கு தமிழ் சினிமாவிலும் அதிக படங்கள் அவரது கையை விட்டு சென்றது. இருப்பினும் பல முயற்சிகளை மேற்கொண்டு பல தோல்விகளையும் சந்தித்து பெங்காலி திரைப்படமான பாலோ தேகோ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் அவர் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்று பல பரிமாணங்களில் பல கதாபாத்திரங்களை தாங்கி இன்றுவரை சிறப்பான நடிப்பை காட்டி அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றவராக நடிகை வித்யா பாலன் விளங்கி வருகிறார்.மேலும் தமிழ் சினிமாவிலும் அடியெடுத்து வைத்த வித்யா பாலன் நடிகர் அஜித்குமார் உடன் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டினார். சமீபத்தில் இவர் தனது முதல் காதல் குறித்து பேசியதும் அதனால் அவர் பட்ட கஷ்டம் மற்றும் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் அவதி உற்றுத் தருணங்கள் குறித்தும் கூறியிருந்தது சமூக வலைதளம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வித்யா பாலன் தனது சினிமா வாழ்க்கையில் நடந்த மற்றுமொரு கசப்பான சம்பவத்தை கூறியுள்ளார். அதாவது வித்யா பாலன் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பொழுது அங்கு அவருக்கு ஹேய் பேபி என்ற படத்தின் நடிப்பிற்காக விருது கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விருதானது ஹே பேபி படத்தின் மூலம் ரசிகர்களின் பெருமலான ஆதரவை பெற்றதற்காக கொடுக்கப்பட்ட விருதாகும்! மேலும் அந்த விருந்து விழாவில் கலந்து கொண்ட வித்யா பாலன் அணிந்திருந்த உடையை அவரது ஆடை வடிவமைப்பாளர் தான் தேர்வு செய்துள்ளார், இதனை அவர் விருது பெறும் பொழுது கூறினார் இருப்பினும் அங்கிருந்தவர்கள் அவற்றை கேட்காமல் வித்யா பாலனை அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ளனர், அதனால் அங்கு அவரால் தைரியமாக பேச முடியாமல் மௌனமாக அந்த விருதை பெற்றுவிட்டு திரும்பி உள்ளார். இப்படி பொதுவெளியில் விருது வழங்கும் மேடையில் தான் அவமானப்பட்டதை நினைத்து அன்று இரவெல்லாம் அவர் தூங்கவில்லை என்பதையும் சினிமா பின்னணி இல்லாமல் திரை உலகம் வந்தால் இது போன்ற அவமானங்களை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொண்டதாக கூறியுள்ளார். இது வித்யா பாலனின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.