தமிழக பாஜக சார்பில் கோவில்களை திறக்க வேண்டும் இல்லை என்றால் தடையை மீறி கோவிலுக்கு சென்று மாநிலத்தை ஸ்தம்பிக்க வைப்போம் என எச்சரிக்கை விடுத்தார் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இதற்கு நேர்காணல் ஒன்றில் பதிலளித்த தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.,
மத்திய அரசிடம் இருந்து அனுமதி வாங்கி வந்தால் திறக்கிறோம், கோவில்களை திறக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தட்டும் நாங்களும் பார்க்கிறோம் மாநிலம் ஸ்தம்பிக்குதா இல்லையா என நக்கலாக பதில் அளித்தார், இந்த சூழலில் அண்ணாமலை கெடு விதித்த 10 நாட்களில் கோவிலை வெள்ளி சனி ஞாயிறு என மூன்று நாட்கள் திறக்க விதித்த தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த இந்து சமய அறநிலையைத்துறை அமைச்சர் சேகர் பாபு பக்தர்களுக்கு எது தேவையோ அதை செய்ய முதல்வர் தயாராக இருக்கிறார், எந்த கட்சியின் அழுத்தத்தின் காரணமாகவும் நாங்கள் இதை செய்யவில்லை என குறிப்பிட்டார் சேகர் பாபு, இந்த வீடியோ காட்சிகளை ஒன்று சேர்த்து ட்ரோல் செய்யபட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்ததும் அதன் பிறகு நடைபெற்ற சம்பவங்களை கோர்வையாக கோர்த்து யூடுப் சேனல் ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது, இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வர இதை பார்த்த திமுகவினர் ஷாக்காகியுள்ளனர், கமெண்ட் பாக்ஸில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் கந்துவெட்டி கோவிந்தா உன்னை பெரிய ரவுடின்னு நினச்சேன் ஆனா ஒரே அடிக்கே பொசுக்குன்னு போயிட்டியே என வடிவேல் பேசும் வசனங்கள் உள்ளிட்ட வடிவேல் நகைச்சுவை காட்சிகளை கொண்டே ட்ரோல் வீடியோ வெளியிட்டு இருப்பது மிகுந்த மன வேதனையை திமுகவினருக்கு கொடுத்துள்ளது என்றே கூறலாம். வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.