Cinema

எங்களை "காப்பாற்றுங்கள்" டெல்லிக்கு படை எடுக்கும்? சினிமா பிரபலங்கள் 'அவரும்' இருக்கிறாராம் !

tamil cinema
tamil cinema

தமிழக சினிமா துறையில் ஆளும் கட்சி பெயரை சொல்லி கட்டபஞ்சாயத்து நடைபெறுவதாக நடிகர் சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் புகார் தெரிவித்தார், அத்துடன் சிம்புவின் தாய் முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் திட்டமிட்டு தீபாவளிக்கு சிம்பு படம் வெளியாக கூடாது என வேண்டும் என்றே மாநாடு படத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார் டி.ஆர்.


மாநாடு படத்தை தொடர்ந்து தீபாவளி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட "எனிமி" பட தயாரிப்பாளரும் தங்களது வேதனையை வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சில வினியோக ஏரியாக்களில் அண்ணாத்த திரைப்படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என மறைமுக உத்தரவு வருகிறது என அப்படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

 இதனால் தன்னுடைய படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் வேதனை தெரிவிக்கிறார்.விநியோகஸ்தர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதால் திருச்சி, மதுரை, சேலம் ஆகிய மூன்று ஏரியாக்களுக்கான வியாபாரம் மட்டுமே நடைபெற்றுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, தென் ஆற்காடு வட ஆற்காடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கான உரிமை திரையங்குகள் கிடைக்குமா என்ற அச்சம் காரணமாக விற்பனையாகவில்லை என கூறியுள்ளார்..

தமிழகத்தில் "எனிமி" திரைப்படத்திற்கு 250 திரையரங்குகள் போதுமானது என தயாரிப்பாளர் வேண்டுகோள் வைத்துள்ளார். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்படும் என்று வினோத் தெரிவித்துள்ளார்.மொத்தத்தில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் வெளிப்படையாக இந்த தீபாவளி எங்களுக்கானது, அதற்காகத்தான் 100% இருக்கைக்கு அனுமதியே கொடுத்துள்ளோம், நாங்கள் தயாரித்த படத்தை வெளியிட உள்ளோம் நீங்கள் எல்லாம் ஓரமா போங்கள் என விரட்டியே விட்டார்களாம்.

அத்துடன் தமிழ் சினிமாவில் வலிமையான நாயகன் படத்திற்கும் முட்டு கட்டை உண்டாகலாம் என்பதால் இப்போதே அப்படத்தின் தயாரிப்பாளர்கள் வட நாட்டில் இருந்து ஓடிவந்து அரசியல் சினிமா பிரபலத்தை சந்தித்து துண்டு போட்டுவிட்டு சென்றுள்ளாராம்.அதிமுக ஆட்சியில் அக்கட்சிக்கு எதிராக விமர்சனம் வைக்க முடிந்த திரை துறையினரால் இப்போது தங்கள் படத்தை கூட நினைத்த நாளில் திரைக்கு கொண்டுவர முடியவில்லை.இதில் ஆர்யா இதற்கு முன்னர் நடித்த சர்பட்டா படத்தில் முழுக்க முழுக்க திமுக நிலைப்பாடு இருந்தது, தற்போது அவரது படமும் வெளியாகவில்லை, அதோடு சிம்பு பெரியார் குத்து பாட்டு எல்லாம் பாடி பா.ஜ.க வை எதிர்த்து திரையில் மறைமுக குரல் கொடுத்தார், இப்போது அவரையும் வீட்டில் முடக்கியுள்ளனர்.

இந்த சூழலில் 50 திரை துறையை சேர்ந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர் என தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் பிரதமரை சந்தித்து தாங்கள் தற்போது சந்திக்கும் பிரச்சனை குறித்து எடுத்து கூற திட்டமிட்டு இருக்கிறார்களாம், டி.ராஜேந்தர் டெல்லி வரை இந்தவிஷயத்தை எடுத்து செல்வேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.

எல்.முருகன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரை துறையினருடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. எல் முருகனிடம் திரை திரையில் ஒரு சிலரால் நடப்பது என்ன என எடுத்து கூறி அவர் மூலம் பிரதமரை சந்திக்கலாம் என திரை துறையை சேர்ந்தவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்களாம், இந்த குழுவில் விரைவில் GST குறித்து வசனம் பேசிய நடிகரும் இணையலாம் என கூறப்படுகிறது. இதில் இதுவரை வெளியாகாத தகவல் என்னவென்றால் சுற்று சூழல் தொடங்கி, நீட் தேர்வு வரை எதிர்த்த நடிகர் தீபாவளிக்கு திரைக்கு தனது படத்தை கொண்டுவர திட்டமிட்டாராம்.

ஏற்கனவே உங்கள் மனைவி படம் "தியேட்டரில்" வெளியாகாத காரணத்தால் விநியோகஸ்தர்கள் கோவமாக இருக்கிறார்கள், உங்கள் பாணியில் வழக்கம் போல் உங்கள் உறவினர் பொறுப்பில் இருக்கும் ஓடிடி தளத்திலே படத்தை வெளியிட்டு கொள்ளுங்கள் என விரட்டி அனுப்பியுள்ளார்கள்.வேறு வழியின்றி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அந்த நடிகர் குடும்பமே இருக்கிறதாம். இந்த திரை துறை விவகாரம் நீர் பூத்த நெருப்பாக இருப்பதால் மின்துறை ஊழல் புகார் போன்று விரைவில் வெடிக்கலாம் என கூறப்படுகிறது.