Cinema

நேற்று தான் சொன்னாரு படமே வர போகுதா...! பக்கம் 21 டைட்டில் ரெடி ஹீரோ யார்?

Annamalai, periyar
Annamalai, periyar

தமிழகத்தில் பெரியாரை படி படி என சொல்லிக்கொண்டு இருந்த அரசியல் கட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக கணத்த இதயத்தில் அமைதியாக இருக்கின்றன அதற்கு காரணம் கோவை கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை திமுக குறித்து பெரியார் பேசிய பேச்சுக்களை மேடையில் வெளிச்சம் போட்டு காட்டியது.


இந்த சூழலில் புதிய தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் பலர் பெரியார் இப்படியெல்லாம் திமுகவை பேசி இருக்கிறாரா? ஏன் இத்தனை நாட்கள் திமுகவினர் வாயே திறக்கவில்லை என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர். ஏன் பல திமுகவினருக்கு கூட பெரியார் தங்கள் கட்சியை மிகவும் மரியாதை குறைவாக வண்டை வண்டையாக அச்சில் ஏற்ற முடியாத அளவில் பேசி இருக்கிறார் என்பதே இப்போது தான் தெரியவந்துள்ளது.

இத்தனை நாள் பெரியார் கருத்துக்களை திமுகவினர் பகிர்ந்து பெரியாரை படி என்று கூறிவந்த நிலையில், நேற்றில் இருந்து சமூக வலைத்தளங்களில் பெரியார் திமுக குறித்து பேசிய கருத்துக்களை பகிர்ந்து உண்மையில் பெரியாரை படிக்க வேண்டும் என திமுகவினரை நக்கல் செய்யும் விதமாக மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர் பாஜகவினர்.

இது ஒருபுறம் என்றால் பக்கம் 21 என்ற பட டைட்டிலில் பெரியார் திமுக குறித்து பேசிய பேச்சுக்களை ஆவணங்கள் அடிப்படையில் ஆவண படமாக எடுக்க நேற்றே முயற்சிகள் தொடங்கி விட்டதாம் ஏன்? அதில் பெரியாராக யாரை நடிக்க வைக்கலாம் என ஆலோசனன செய்து இறுதியில் வேலு பிரபாகரனை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என்பது வரை ஒரு குழு முடிவு செய்து இருக்கிறதாம்.

ஆ.ராசா இந்துக்களை பேசுவதாக பேசி இப்போது தனது சொந்த கட்சியான திமுகவை பெரியார் என்னென்ன அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை எல்லாம் பயன் படுத்தி இருக்கிறார் என்பதை வெளி உலகிற்கு கொண்டு வந்து விட்டார். இனி பெரியாரை படி படி என்று சொன்னால் திமுகவை பெரியார் சொன்ன வார்த்தைகள் தான் வெளிவருமோ?

எப்படியோ இதுநாள் வரை பெரியார் திரைப்படத்தை எப்போது புது வடிவில் எடுப்பீர்கள் என ஆசையாக கேட்டு வந்த உடன்பிறப்புகள் நிச்சயம் பக்கம் -21 படத்தை எதிர்க்க போவது நிச்சயம் என்கின்றனர் திரைத்துறை வட்டாரங்கள்.

மொத்தத்தில் அண்ணாமலை நேற்றுதான் பக்கம் 21 குறித்து பேசினார் இன்று திரைப்படமாக உருவாகும் அளவிற்கு செயல்பாடுகள் தொடங்கி இருப்பது ஆச்சர்யத்தை உண்டாக்கி இருக்கிறது.