தமிழகத்தில் திரை துறையில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன முன்பேல்லாம் இந்து மதத்தை தாழ்வாக விமர்சனம் செய்யும் விதமாகவும் இந்துக்கள் குறித்து சர்ச்சையை உண்டாக்கும் விதமாக பல்வேறு திரைப்படங்கள் நாடு முழுவதும் பரவலான மொழியில் வெளியாவது வழக்கம்.
ஆனால் கடந்து மூன்று ஆண்டுகளில் அது முழுமையாக மாற்றத்தை சந்தித்து இருக்கிறது இந்து மதத்தை விமர்சனம் செய்யும் திரைப்படங்கள் ஒன்று வெளியாவதில் சிக்கல் ஏற்படுகிறது இல்லை வெளியான பின்பும் மக்கள் புறக்கணிக்கும் செயலால் தோல்வியை தழுவிக்கின்றன.
சமீபத்தில் பாலிவுட் திரைப்படங்கள் மிக பெரிய பின்னடைவை சந்தித்து வருகின்றன அதனை அடுத்து இந்து மதம் சார்ந்து அல்லது எந்த மதத்தையும் விமர்சனம் செய்யாத பொழுது போக்கு திரைப்படங்கள் மிக பெரிய வெற்றியை பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலில் தான் வடக்கே வாங்கிய அடி நாளை தமிழகத்திலும் அரங்கேறலாம் என ஒரு கூட்டம் அஞ்சுக்கிறதாம்.
நமக்கு என்று இருக்கும் ஒரே துறை சினிமா துறை இதன் மூலம் மக்களை எளிதாக கவர முடியும் என கணக்கு போட்டு செயல்பட்டால் இங்கும் இப்போது இந்து கடவுள், இந்து மன்னர்கள் என படத்தை எடுக்க தொடங்கிவிட்டார்கள் என ஒரு தரப்பு குறிப்பாக அரசியல் மற்றும் சினிமா துறையில் இருக்கும் முக்கிய மூவர் புலம்பி வருகின்றனராம்.
அதன் வெளிப்பாடுதான் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் மன்னன் ராஜ ராஜ சோழன் வரலாற்றை கூறும் விதமாகவும் குறிப்பாக நெற்றியில் திருநீறு உடன் இருக்கும் காட்சிகளால் அரண்டு போயி பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசியல் திறன் ஆய்வாளர் சுந்தர் ராஜ சோழன் குறிப்பிட்ட கருத்துக்கள் பின்வருமாறு :-
எவ்வளவு முயன்றாலும் அழிக்கமுடியாத ஹிந்துத் தன்மை பொன்னியின் செல்வனில் உயர்ந்தோங்கியுள்ளது. அதனுடைய வணிக வெற்றி இங்கே சில லாபிக்களை கதறவிட்டுள்ளது என தெரிகிறது.
நெற்றியில் திருநீறு வைப்பது,திருமண் வைப்பது,நாராயணா என சொல்வது,வேதகோஷம் கேட்பது என்று சிறு சிறு தடங்களைக் கூட சகித்துக்கொள்ள முடியாத ஹிந்து வெறுப்பு கூட்டத்தை நினைத்தாலே நமது கடந்தகால வீழ்ச்சியின் வீச்சு புரிகிறது.
ஹிந்தி சினிமாவில் தன் அடையாளத்தை அழித்துக் கொண்டும்,அடக்கியும் வாசித்த நிலையை தமிழ் சினிமாவிலும் ஹிந்துக்களுக்கு கொண்டு வர எத்தனித்த ஒரு கூட்டம் இக்கட்டான கட்டத்தில் சிக்கிவிட்டது.பாலிவுட்டில் ஹிந்து வெறுப்பை கக்கிய நடிகர்/நடிகைகளையும், இயக்குனர்களையும் மக்கள் புறக்கணித்து,அவர்களுடைய வணிக வெற்றியை கேள்விக்குறி ஆக்கிவிட்டார்கள்.
அது இங்கேயும் வரும் என்பதை,சினிமா உலகின் கையைமுறுக்க நினைத்த சிறுகூட்டம் எண்ணி அஞ்சுவது தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார் மொத்தத்தில் மக்களிடம் உண்டான விழிப்புணர்வு இப்போது பெரும் மாற்றத்தை சினிமா துறையிலும் உண்டாக்கி இருக்கிறது.