நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களினுடைய ‘தமிழோசை’ வழங்கும் சங்கத் தமிழிசை விழா கடந்த சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது, இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
கலந்துகொண்ட சீமான் ஜேம்ஸ் வசந்தன் சொல்லி கொடுத்த நடனத்திற்கு நடனம் ஆடவும் செய்தார், இந்த சூழலில் சீமான் மீது பல்வேறு குற்றசாட்டுகளை வெளிப்படுத்திவரும் நடிகை விஜயலட்சுமி சீமான் நடனம் ஆடியதை விமர்சனம் செய்துள்ளார், இதுவே திமுக அல்லது பாஜகவினர் நடனம் ஆடி இருந்தால் இந்த சீமான் வாய் கிழிய பேசி இருப்பார் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
அதோடு சீமானுக்கு டெடிகேட் செய்வதாக சினிமா பாடல் ஒன்றிலும் விஜயலட்சுமி நடனமாடி இருக்கிறார், அதில் நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேண்டும்என குறிப்பிட்டு இருக்கிறார், அதற்கு முந்தைய வீடியோவில் விஜயலட்சுமி கடுமையாக சீமானை விமர்சனம் செய்துள்ளார், ஆ. ராசா இந்துக்கள் குறித்து பேசிய கருத்தை சீமான் வரவேற்கிறேன் என்ன தப்பு என கேட்கும் தைரியம் எப்படி சீமானுக்கு வந்தது?
மிகவும் மோசமான நபர் சீமான், என்னுடைய பழகிய காலத்தில் என் நெற்றியில் இருக்கும் விபூதியை கிண்டல் செய்தவன் இன்றைக்கு கோவில் கோவிலாக சென்று விபூதி அடித்து கொண்டுள்ளார், சீமான் ஒரு சைமன் எனவும் அடிக்கடுக்காக சீமானை விமர்சனம் செய்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
விஜய லட்சுமி சீமான் குறித்தும் ஆ. ராசா குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்துள்ள வீடியோ நாளை TNNEWS24 DIGITAL யூடுப் பக்கத்தில் வெளியாக இருக்கிறது.