Cinema

"அடிப்படை அறிவு" இல்லை கமலுக்கும் டோஸ்...போட்டு தாக்கிய டாக்டர் கிருஷ்ணசாமி !

Kamal, vetrimaran,  dr.krishnasamy
Kamal, vetrimaran, dr.krishnasamy

ராஜ ராஜ சோழனை இந்துவாக மாற்ற முயற்சி நடக்கிறது என சர்ச்சை கருத்தை தெரிவித்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் சினிமா இயக்குனர் வெற்றிமாறன், அவருக்கு ஆதரவு தெரிவித்த நபர்களும் கடும் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் கமல்ஹாசனும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.


இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் செதியாளர்களை சந்தித்தார் அப்போது மதம் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் திரைப்படம் எடுப்பதாகவும் கடுமையாக சாடி இருக்கிறார் இது குறித்து அவர் பேசியதாவது.,

மதம் பற்றி அடிப்படை தெரியாமல் திரைப்படம் எடுக்கிறார்கள், தமிழ் திரைப்படங்களில் ஆபாசம், அரிவாள் கலாசாரத்தை முழுக்க சொல்லிவிட்டு, கடைசி ஒரு நிமிடம் பாசிட்டிவ் கருத்துக் சொல்லவதை ஏற்க முடியாது. திரைப்படம் அரசியலை கைப்பற்ற நினைக்கிறது. விருமாண்டி, கொம்பன் போன்ற வன்முறை படங்களை நாங்கள் எதிர்த்தபோது, கருத்துச் சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றனர்.

தற்போது, திரைப்படங்கள் மூலம் அரசியல் பேசுகின்றனர். இது தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். திரைத்துறையில் முதலீடு செய்வோர் சம்பாதிக்கலாம். அதற்காக தமிழக இளைஞர்களை சீரழிக்கக்கூடாது.

பெரியார் மது, சினிமாவை ஒழிக்கவேண்டும் என்றார். ஆனாலும், இன்றைக்கு நடிகர்களால் தமிழகம் சீரழிகிறது. சினிமாவால் இளைஞர்கள் மது, போதை மாத்திரைக்கு அடிமையாகின்றனர்.

பஞ்ச பூதங்களை வழிப்படும் முறை இந்தியாவில் உள்ளது. எந்த வழிபாடும் நேரடியாக நடைமுறைக்கு வரவில்லை. சூழலுக்கு ஏற்ப மாறியிருக்கலாம். சிவபெருமானை வழிப்படுவர் இந்துவாக தானே இருக்க முடியும். மதம் பற்றி அடிப்படை தெரியாமல் திரைப்படம் எடுக்கின்றனர்.

பாரம்பரியம், கலாசாரம், பண்பாடுகளை தெரிந்து கொண்டு பொதுத் தளத்திற்கு வரவேண்டும். இல்லையெனில் அந்நிய நாட்டு ஏஜன்டுகளாக செயல்படுகின்றனர் என, பொருளாகிவிடும். நமது கலை, கலாசாரம், பண்பாடுகளை திரைப்படங்கள் சீரழிக்கும் விதமாக செயல்படுகின்றன. இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். என்று அவர் கூறினார்.

தனது பேட்டியில் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் கமலுக்கும் சேர்த்து டோஸ் கொடுத்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி இனியாவது தமிழ் திரை உலகம் திருந்துமா என்பதே மக்களின் எதிர்பார்பாக இருக்கிறது.