நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன, எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அனைத்து மக்களும் தங்களது வீடுகளில் வருகின்ற 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது, பிரதமர் மோடி அனைத்து மக்களும் தேசிய கொடியை வீடுகளில் ஏற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் தங்களது சமூக வலைத்தளங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்கவும் வேண்டுகோள் விடுத்தார், இதையேற்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் முகப்பு படமாக இந்திய தேசிய கொடியை மாற்றி வருகின்றனர்.
கேரளாவில் உள்ள முன்னணி நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி தொடங்கி அனைவரும் மாற்றி விட்டனர், இது ஒருபுறம் என்றால் தமிழகத்தில் இராணுவ வீரர்களாக நடித்து வசூல் அள்ளிய நடிகர்கள் பலர் இந்திய தேசிய கொடியை முகப்பு படமாக மாற்றாமல் இருந்தது வேதனை கொடுத்தது, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் முகப்பு படங்களில் தேசிய கொடியை வைத்து இருக்கின்றனர்.
இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக மாற்றி அதிரடி நிகழ்த்தி இருக்கிறார், இந்த சூழலில் இந்திய இராணுவ வீரர்களாக நடித்த விஜய் கமல் போன்றோர் தேசிய கொடியை முகப்பு படமாக மாற்றாமல் இருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இராணுவ வீரர்களாக நடித்து பணம் சம்பாரிக்க தெரியும் ஆனால் இந்திய திரு நாட்டிற்கு ஆதரவாக முகப்பு படத்தை மாற்ற முடியாதா என விஜய் கமல் போன்றவர்களை விரட்டி அடித்து வறுத்து எடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்