வீட்டில் ஒருவர் மதம் மாறினால் என்ன நடக்கும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும், நாங்கள் பல கஷ்டங்களை அனுபவித்தோம், சொந்த பந்தம் வீட்டில் கொடுக்கும் சாப்பாட்டை கூட சாப்பிட கூடாது என்பார்கள் திருவிழா முதல் எந்த விழாகளிலும் கலந்து கொள்ள முடியாது மொத்தத்தில் வெளிநாட்டில் வசிப்பதை போல இருக்கும். பல பணத்தை சந்தோசத்தை இழந்தோம் என தெரிவித்துள்ளார். ஆனால் அதனை சகித்து கொண்டு நாங்கள் இருக்க விரும்பவில்லை ஒரு கட்டத்தில் தாய் மதம் திரும்பினோம், திரைப்படத்தின் ட்ரைலர் பார்த்தேன் அதனால் இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என வந்தேன் என நடத்தர வயதுடைய பெண் தெரிவித்தார். இந்த வீடியோ காட்சியை பலவற்றை கட் செய்து பிரபல ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த காட்சிகள் பல உண்மையை வெளி உலகிற்கு சொல்லியுள்ளது பலர் கருத்து தெரிவித்துள்ளனர், அவர் பேசிய வீடியோவை பார்க்க கிளிக் இதற்கிடையே பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் ருத்ரதாண்டவம் திரைப்படம் குறித்து தெரிவித்துள்ள கருத்து பின்வருமாறு :- இந்த "ருத்ர தாண்டவம்" படத்துக்கு மக்கள் வழங்கும் பேராதரவு மகிழ்ச்சி தரகூடியது, உலகெல்லாம் குடும்பத்தோடு மக்கள் குவிகின்றார்கள், பெருகிவிட்ட தொழிநுட்பத்திலும் திரையரங்கில்தான் பார்ப்போம் என மக்கள் செல்வது, அவர்கள் இப்படத்துக்கும் இயக்குநருக்கும் அவர் சொல்லவரும் விஷயத்துக்குமான பெரும் ஆதரவு
அஜித்குமார் கால்ஷீட் கிடைக்குமா என அவனவன் தவமிருக்கும் காலத்தில் யாருமே தேடாத அஜித்தின் மச்சினனை பிடித்து இயக்குநர் ஜெயித்திருப்பது எப்படி? பெரும் அடையாளமில்லை, பொதுவாக தமிழகம் ஸ்டார்கள் எனும் நடிகர்களைத்தான் நேசிக்கும், இயக்குநர்கள் அவர்கள் பொருட்டே அல்ல, ஜாம்பவான்கள் பீம்சிங் தொடங்கி ஷங்கர் வரை எல்லார் படமும் ஸ்டார் வேல்யூ என மிகபெரிய நட்சத்திரங்களையே நம்பும் பொழுது ஒரு இயக்குநருக்காக மக்கள் குவிந்தார்களே எப்படி?
படத்தின் மிகபெரிய வரவேற்பு சொல்வது ஒன்றுதான், படத்தில் சொல்லும் ஒவ்வொரு விஷயத்தாலும் ஏராளமானவர்கள் பாதிக்கபட்டிருக்கின்றார்கள்,அது போதை, சாதி தலைவன், தவறாக பயன்படும் சாதிய வன்கொடுமை சட்டம், அச்சட்டத்தின் பின்னணியில் சிலர் செய்யும் ரவுடியிசம் என பாதிப்புகள் ஏராளம்,இந்த கிறிஸ்தவ மதமாற்ற கும்பலின் அடாவடியாலும் காங்கிரசும் திமுகவும் அவர்களுக்கு கொடுத்த ரகசிய ஆதரவாலும் பாதிக்கபட்ட மக்கள் ஏராளம்
சாதிய வன்கொடுமை சட்டம் எவ்வளவு தவறாக பயன்படுத்தபட்டது என்றால் கடந்த ஆண்டில் அச்சட்டம் திருத்தபடும் அளவு அது மோசமாயிற்று,பிரபல சாதி ரவுடிகள் சொத்துக்களை ஆக்கிரமிக்கவும் மிரட்டவும் அபகரிக்கவும் பல இடங்களில் அது உதவிற்று, சாதிய போர்வையின் சட்டங்களில் ஒளிந்தபடி ஒவ்வொரு ரவுடியும் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல,அவர்களால் பாதிக்கபட்ட கண்ணீர்விட்ட நல்ல குடும்பத்து மக்கள், பக்திமிக்க மக்கள் கொஞ்சமல்ல
அந்த கண்ணீர்தான் பாஞ்சாலியின் கண்ணீர் போல் தர்மத்தை மீட்டெடுத்திருக்கின்றது, இயக்குநர் மோகன் என்பவர் பாதிக்கபட்ட மொத்த மக்களின் பாதிப்பாக அப்படத்தை கொடுத்திருக்கின்றார், இங்கு எக்காலமும் இந்த திராவிட மோசடிகளுக்கு எதிரான குரல் கண்ணதாசன் , ஜெயகாந்தன், சோ ராமசாமி என உண்டுஅவர்களின் தொடர்ச்சியாக தமிழ்கம் மோகன் அவர்களை கண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார் .