தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் புயலை கிளப்பிய சூழலில் கடந்த ஜனவரி 20 ம் தேதியே இது குறித்த தகவல் மாநில அரசிற்கு தெரியவந்ததும் அவர்கள் எத்தனையோ முறை முயன்றும் ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
அத்துடன் பிப்ரவரி 1 அன்றே நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான முழுமையான காரணத்தை ஆளுநர், தமிழக அரசிற்கு முழு விளக்கமாக கொடுத்து இருப்பதாகவும் ஆனால் தமிழக அரசு அதனை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்ததும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துவரும் சூழலில் தற்போது ஆளுநருக்கு உள்துறை அமைச்சகத்தில் இருந்து மிக முக்கிய உத்தரவு கிடைத்துள்ளது, அதாவது நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டிய பொறுப்பை கடந்த ஆண்டே அனைத்து மாநில ஆளுநர் சந்திப்பில் அமிட்ஷா கூறியிருந்தார்.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழங்களை நீங்கள் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் அமிட்ஷா வலியுறுத்தி இருந்தார், இதையடுத்து ஆளுநரும் ஒவ்வொரு பல்கலைக்கழகமாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அத்துடன் துணை வேந்தர்களை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார் , இந்த சூழலில் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் புதிய கல்வி கொள்கையை அமலப்படுத்த வேண்டும் எனவும் அதற்கான அனைத்து முயற்சியையும் மாநிலத்தின் ஆளுநர்கள் தயார் நிலையில் வைத்து இருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் புதிய கல்வி கொள்கையை மாநிலத்தில் அமல்படுத்துவத்தில் மிக பெரிய அதிர்வலைகள் உண்டாகும் கூறப்படுகிறது.