Cinema

டெல்லிக்கு மாற்றம் விஷயம் முடியவில்லை இப்போதான் தொடங்கி இருக்கு ஷாருக்கான் மகன் விஷயத்தில் அதிரடி திருப்பம்!

aryan khan
aryan khan

"ஷாருக்கான் மகன் ஆரியன் கான் விவகாரத்தை விசாரிப்பதிலிருந்து மும்பை நார்க்கோட்டிக்ஸ் தலைவர் சமீர் வான்கடே நீக்கப்பட்டார்" என்று ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சூழலில் அவர்களது கொண்டாட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை தற்போது என்ன நடந்தது என்ற உண்மை தகவல் வெளியாகியுள்ளது.


உண்மை என்ன?"இந்த ஆரியன் கான் விவகாரத்தை மத்திய நார்க்கோட்டிக்ஸ் (Delhi NCB) அமைப்பு விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தேன். அதன் படி எங்களது மும்பை NCBயிலிருந்து டில்லி NCBக்கு விவகாரம் மாற்றப்படுகிறது. நான் NCBயிலிருந்து நீக்கப்படவில்லை" என மும்பை மும்பை போதை பொருள் தடுப்புபிரிவிவை சேர்ந்த  சமீர் வான்கடே தெரிவித்துள்ளார்.

 "ஆரியன் கான் விவகாரம் உட்பட மொத்தம் 6 நார்க்கோட்டிக்ஸ் வழக்குகள் டில்லி NCBக்கு மாற்றப்பட்டுள்ளன" என  தென் மேற்கு போதை பொருள் தடுப்பு பிரிவுத்தலைவர் தலைவர் ஜெயின்.

 "டில்லி NCB இனி சிறப்பு புலனாய்வு அமைப்பு அமைக்கப்பட்டு அதன் மூலம் மும்பை NCBயின் சில வழக்குகள் விசாரிக்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்த வழக்குகள் சில உள்நாட்டு - 'வெளிநாட்டு' சிக்கல்கள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் எந்த அதிகாரியும் நீக்கப்படவில்லை." ஊடகங்களில் சமீர் வாங்கடே நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை என டெல்லி NCB விளக்கம் கொடுத்துள்ளது.

ஆர்யன் கான் வழக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு  மாற்றப்பட்டதால் என்ன பயன்…? ஆரியன் கான் விவகாரத்தை விசாரித்த சமீர் வான்கடே மீது அடுக்கடுக்காக வழக்குகள் போட்டு விசாரிக்க ஆரம்பித்தது மஹாராஷ்டிர சிவசேனா கூட்டணி அரசு. இந்த நிலை நீடித்தால் எந்த அதிகாரியும் எந்த வழக்கையும் விசாரிக்க முடியாது எனவே தான் நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை டில்லிக்கு மாற்றச் சொல்லி கோரிக்கை வைத்தார் சமீர் வான்கடே. டில்லியும் எடுத்துக் கொண்டது.

மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவை குறிவைத்து இனி சிவசேனா அரசால் அவர்கள் மீது வழக்கு போட முடியாது. இனி எல்லாம் டில்லியில் இருந்து நடக்கும். மஹாராஷ்டிர அரசு ஆர்யான் கான் வழக்கில் தன் கட்டுப்பாட்டை முழுதும் இழந்துள்ளது இனி ஆர்யன் கான் கைது செய்யப்பட்டால் டெல்லிக்கு தான் அழைத்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

மேலும் இந்த வழக்கில் , 'வெளிநாட்டு' சிக்கல்கள் (ramifications) என்று குறிப்பிட்டிருப்பது மிக முக்கியமான விஷயம். ஆரியன் கானின் வாட்சாப் தொடர்புகளில் வெளிநாட்டு சப்ளையர்கள் பெயர்கள் உள்ளன எனவும் அவற்றை பற்றி மும்பை NCB விசாரணயின் போது வாய் திறக்க மறுத்துவிட்டார் ஆரியன் கான். என்று கூறப்படுகிறது

அதனால் தான் ஆர்யான்கானை கஸ்டடியில் வைத்து விசாரிக்க மும்பை NCB கோரியது. ஆனால் நீதிமன்றம் ஆர்யன் கானிற்கு ஜாமீன் கொடுத்து இருப்பதால் விசாரணை தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது,சர்வதேச சிக்கல்' என்பது ஐரோப்பிய போதை வஸ்து கூட்டம் சிக்குகிறது என்கிறார்கள் சிலர். விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. 

சுஷாந்த் சிங் விவகாரத்தில் ஆரம்பித்து ஆரியன் கான் விஷயம் வரை  பல்வேறு வழக்குகள் சிவசேனா கூட்டணி அரசால் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி மாறினால் தற்போதுள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என கூறப்படும் நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சுசாந்த் சிங் மரண வழக்கில் தொடங்கி ஆர்யன் கான் விவாகரம் வரை அனைத்திற்கும் முடிவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆர்யன் கான்  தொடர்பான வழக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டு இருப்பது ஆர்யன் கான் விவாகரம் முடிவடையவில்லை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள். இதுபோன்ற தனித்துவமான செய்திகளை தெரிந்து கொள்ள நமது TNNEWS24 டிஜிட்டல் பக்கத்தை மறக்காமல் SUBSCRIBE செய்து கொள்ளவும்.