Cinema

எங்கே போனாலும் 'கேட்" போட்டா எப்படி இனி அந்த வார்த்தையை ராகுல் சொல்லுவாரா?

rahul gandhi
rahul gandhi

ராகுல் காந்தி இந்தியாவில் மூக்கு உடைபடுவது போதாது என்று இந்தியா மாநிலங்களின் கூட்டமைப்பு என்று கூறி வெளிநாட்டிலும் வாங்கி கட்டி இருக்கிறார், இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது, அது பின்வருமாறு :-


"நாடுகள் அரசியலமைப்பை உருவாக்குகின்றன, அரசியலமைப்பு நாடுகளை உருவாக்காது!லண்டன் கேம்பிரிட்ஜில், "இந்தியா ஒரு நாடல்ல, மாநிலங்களின் கூட்டமைப்பு" என்று  ராகுல் காந்தி சொல்ல அதற்கு கேம்பிரிட்ஜில் இருக்கும் இந்தியர் சித்தார்த் வர்மா, "நம் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது - இந்தியா ஒரு தேசம். அது தன் வசதிக்காக மாநிலங்களை உருவாக்கியுள்ளது. அது மாநிலங்களின் கூட்டமைப்பல்ல (Federation)." என்று விளக்கியதால் ராகுல் காந்தி மேடையில் அசிங்கப்பட்டார்.

அந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் இன்னும் தன் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்பதிலிருந்து இது எது போன்ற பதிலடியாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுகின்றன.

அதோடு சித்தார்த் வர்மா, "நாடுகள் தான் (தங்கள் வசதிக்கு) அரசியலமைப்பை உருவாக்குகின்றன. அரசியலமைப்புகள் நாடுகளை உருவாக்குவதில்லை" என்றும் ராகுலுக்கு பாடம் எடுத்தார்.இப்படி எல்லோரும் தெளிவாக பேச ஆரம்பித்துவிட்டால் எதை வைத்து அரசியல் செய்வது என்று காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இனி ராகுல் காந்தி இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவாரா?