2000 - 2007 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவரது நடிப்பு பல திரைப்படங்களில் மக்கள் மத்தியில் வரவேற்பை கண்டுள்ளது. 1999 வாலி திரைப்படத்தில் அஜித் தன் முன்னாள் காதலியை கூறும் கதையில் நடிகையாக நடித்த பிறகு 2000 ஆண்டில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு கதையின் முழு நடிகையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதற்குப் பிறகு சிநேகிதியே, முகவரி, ரிதம், குஷி என 2000 வருடத்தில் மட்டும் ஆறு படங்களில் நடித்தார். இந்த ஆறு படங்களுமே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு 2001ல் தெனாலி படத்தின் மூலம் கமலஹாசனுக்கு ஜோடியாகவும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இதற்குப் பிறகு மாதவன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற ஜோதிகா, சூர்யாவுடன் ஏற்பட்ட காதலால் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் சில திரைப்படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு சினிமா துறையை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே மற்றும் காற்றின் மொழி ஆகிய திரைப்படங்களில் நடித்து தற்பொழுது நாச்சியார், ராட்சசி என தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மற்றும் சினிமா வட்டாரங்களை பொருத்தவரையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே ஒரு முக்கிய மற்றும் முன்னணி நடிகை நடிகர்கள் இதைத் தாண்டி இவர்கள் இருவரின் ஜோடிக்கு தனி ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆனால் இவர்கள் நடிகை நடிகர்கள் என்பதையும் தாண்டி அரசியல் ரீதியாகவும் பொது சேவையிலும் சிறப்பு கவனம் செலுத்துவதாக நினைத்து பல கருத்துக்களை பொதுவெளியில் முன்வைத்து வருவார்.
அப்படி ஜோதிகா கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொதுவெளியில் முன்வைத்த பல செய்திகள் மற்றும் கருத்துக்கள் இன்று அவருக்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நீட் எதிர்ப்பிற்கு முக்கிய குரல் கொடுத்த சூர்யா மற்றும் ஜோதிகா நீட் தேர்வால் தமிழக மக்கள் சாதனை புரிந்து வருவதை மறந்து அன்று நீட் எதிர்ப்பிற்கும் ஹிந்தி மொழி எதிர்ப்பிற்கும் குரல் கொடுத்ததையும் மறந்து தற்போது மும்பையில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் எப்பொழுதுமே சமூக நீதியையும் கடமையைப் பற்றி தன் திரைப்படங்கள் மூலம் தவறாமல் பேசும் ஜோதிகா சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தனது வாக்கினை செலுத்தாமல் இருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த வரிசையில் சமீபத்தில் ஜோதிகா குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜோதிகா தற்போது வசித்து வருகின்ற பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று தன் குடும்பத்துடன் உணவருந்து விட்டு வெளியே வருகிறார்.
இதற்கு மும்பையில் தன் வாரிசுகளுடன் உணவகத்திலிருந்து திரும்பும் ஜோதிகா ஏன், வீட்டுலேயே சமைச்சுப் போட்டு காசை மிச்சப் படுத்தினா அதை வெச்சு ஒரு ஆஸ்பத்திரி இல்லைன்னாலும் ஒரு க்ளீனிக் கட்டலாமுல்ல? என அரசியல் விமர்சகர் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு காரணம் ஒரு விருது வழங்கும் விழாவில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றிருந்தேன் கோவில் மிகவும் அழகாக இருந்தது ஆனால் கோவிலுக்கு செலவிடும் பணத்தைப் போன்று அரசு மருத்துவமனைகளிலும் செலவிடப்பட்டால் அரசு மருத்துவமனைகளும் சுத்தமாக இருக்கும் என்ற வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு கருத்தினை முன் வைத்திருந்தார். இதற்கு பிறகு திமுக ஆட்சியில் எத்தனையோ பிரச்சனைகளை மக்கள் சந்தித்து விட்டனர். ஆனால் அவற்றிற்கு எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கும் ஜோதிகா பல பத்திரிகையாளர்கள் சந்திப்பு விருது வழங்கும் விழாவிற்கும் சென்று வந்துவிட்டார். இதனாலேயே ஜோதிகாவை அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.