புதிமுக இயக்குனர் ஞானவேல் என்பவர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து, தயாரித்து வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம் திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி அடைந்தது.
அதே சமயம் ஜெய் பீம் திரைப்படத்தில் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவை போலீஸ் லாக் அப்பில் சித்தரவதை செய்து கொலை செய்த போலீஸ் எஸ்.ஐ-க்கு குருமூர்த்தி என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் அவருடைய வீட்டில் வன்னியர்கள் தலையில் சுமக்கும் அக்னி கலசம் காலண்டரில் இடம் பெற்று இருந்தது. இதற்கு, வன்னியர்கள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உண்மையான குற்றவாளி பெயர் அந்தோணி சாமி அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
அவர் பெயரை படத்தில் வைக்காமலும் பின்னால் வன்னியர் அடையாளத்தை போட்டும் திட்டமிட்டு வன்னியர்களை சூர்யா இழிவுப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது, இதையடுத்து ஜெய் பீம் படக்குழுவினர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காலண்டர் படத்தில் இருந்து அக்னி கலசத்தை அகற்றினர்.
ஆனாலும் படம் உண்மை கதை என சூர்யா சொன்ன நிலையில் உண்மையான குற்றவாளி அந்தோணி சாமி பெயரை ஏன் வைக்கவில்லை அவர் கிறிஸ்தவர் என்பதால் சூர்யா திட்டமிட்டு மறைக்க பாக்கிறார் மேலும் உதவிய பஞ்சாயத்து தலைவரை தவறாக படத்தில் வில்லனாக சித்தரித்து உள்ளனர் என. எதிர்ப்பு வலுக்க சூர்யாவிற்கு அன்புமணி ஜெய்பீம் திரைப்படம் குறித்து 9 கேள்வியை எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட சூர்யா அன்புமணியின் புரிதல் தவறு என்றும் தான் விளம்பரம் தேடவேண்டிய அவசியம் இல்லை எனவும் படைப்பு சுதந்திரதிற்கு எதிர்ப்பது சரியல்ல என பதில் அறிக்கை கொடுக்க விஷயம் மீண்டும் வெடித்துள்ளது.
இந்த சூழலில் சூர்யா ஜோதிகா மற்றும் ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது வன்னியர் சங்கம் ஜெய் பீம்' பட நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
₨5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநில தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் வன்னியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது, உண்மை கதை என கூறி பொய் கதைகளை அளந்துவிட்ட சூர்யாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அடுத்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது.