Cinema

பாஜக பெயரை கேட்டாலே சும்மா அதிருதுள்ள "அர்ணாவ்" கைது செய்யப்பட்ட பரபரப்பு பின்னணி!

Arnav Divya 14
Arnav Divya 14

சின்னத்திரை நடிகர் அர்ணாவ் என்ற நைனார் முகமது நேற்று திருவள்ளூர் மாவட்டம் நேமம் என்ற இடத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சூழலில் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் ரீதியாக உண்டான மாற்றமும் ஒன்று என்ற தகவல்தான் தற்போது சின்னத்திரையை ஆட்டம் காண செய்துள்ளது.


தமிழகத்தில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் சூழலில் சமுதாயத்தில் பிரபலமான நபர்கள் என்றால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது மிகவும் கேள்விக்குறிய சம்பவமாகவே பார்க்க படுகிறது அந்த வகையில் அர்ணவ் என்ற நைனார் முகமது  மீது அவரது காதல் மனைவி திவ்யா புகார் கொடுத்தார்.

கர்ப்பிணியான தன்னை காதல் திருமணம் செய்து கொண்ட அர்னவ் அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா தனது புகாரில் குறிப்பிட்டார். அதோடு நில்லாமல் அர்ணவ் தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற சொல்லி கட்டாயபடுத்தியதாகவும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார். ஆனால் அந்த புகாரை கருத்தில் கொள்ளாமல் மாங்காடு காவல் ஆய்வாளர் வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தார் திவ்யா, புகாரை பெற்று கொண்ட மகளிர் ஆணையம் முழுமையாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது, இதில் ஏன் மதமாற்ற புகார் குறித்த பிரிவுகளில் அரணவ் மீது வழக்கு தொடுக்கவில்லை என காவல் ஆய்வாளருக்கு அழுத்தம் அதிகரித்தது.

இதையடுத்து நைனார் முகமது நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜர் ஆகாத காரணத்தால் அவரை திருவள்ளூர் மாவட்டம் நேமம் அருகே படப்பிடிப்பு தளத்தில் வைத்தே காவல்துறையினர்  தூக்கி சென்றனர். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இதில் அரசியல் ஆட்டங்களும் அரங்கேறும் சூழல் இருந்த காரணத்தால்தான் அரணவ் கைது செய்யபட்டதாக மற்றொரு தகவல் வெளிவந்துள்ளது.

நடிகை திவ்யா தன் கணவர் தன்னை ஏமாற்றுவதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகும் முக்கியமான பிரமுகர் ஒருவர் அவருக்கு ஆதரவாக மிக பெரிய லாபி செய்து இருக்கிறார், சேனல் மூலமும் ஏகப்பட்ட அழுத்தமாம். தனக்கு நீதி கேட்டு காவல் நிலைய படி ஏறிய திவ்யா அடுத்ததாக ஊடகங்களை சந்தித்தார்.

மூன்றாவதாக ஆதாரங்களை போன் உரையாடல்களை பொது வெளியில் வெளியிட்டார், இதை அடுத்தும் அர்ணாவ் கைது செய்யப்படாமல் பொது வெளியில் சுதந்திரமாக சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார், இத்தனை சம்பவங்களுக்கு பிறகு இனியும் பொறுமை காக்க முடியாது என முடிவு செய்த திவ்யா கர்நாடக மாநிலத்தில் தனது குடும்ப உறுப்பினர் மூலம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை சந்திக்கவும் முடிவு செய்து இருப்பதாக இருந்தாராம்.

இந்த தகவலை உதவியாளர் மூலமாக ஊடகங்களுக்கு பறக்க அதன் பிறகு காவல்துறை தரப்பிலும் தகவல் பறக்க.. ஏற்கனவே தமிழகத்தில் அரசியல் களத்தில் அண்ணாமலையின் செயல்பாடுகள் கடும் பின்னடைவை ஆளும் கட்சிக்கு கொடுக்க, இந்த விவகாரங்களும் நாளை அண்ணாமலை கவனத்திற்கு சென்றால் அரசியலில் தவிர்க்க முடியாத அடையாளமாக பாஜக மாறிவிடும் என்றும் மேலும் ஊடகங்களில் இது மிக பெரிய கவனத்தை பெரும்...,

எனவே அந்த நிலைக்கு செல்லாமல் இருக்க உடனடியாக அர்ணாவ் திவ்யா புகாரில் கைது செய்யபட்டதாக கூறப்படுகிறது. பாஜக ஆட்சி செய்யும் அல்லது ஆட்சியில் இருந்த மாநிலங்களில் தான் பாஜக பெயரை பயன்படுத்தினால் உடனே காவல்துறை தரப்பில் அதிரடி ஆக்ஸன் அரங்கேறும் அதே போன்று தற்போது தமிழகத்திலும் பாஜக நேரடியாக களம் இறங்காமல் பாஜக பெயரை பயன்படுத்தினாலே இப்போது களத்தில் மாற்றங்கள் நிகழ்வதாக பார்க்கப்படுகிறது.